Monday, March 20, 2006

எனக்கு பிடித்த பாரதி பாடல் - வேண்டுவன

வேண்டுவன

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்கை
வசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திடவேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுறவேண்டும்
வானகமிங்கு தென்படவேண்டும்
உண்மை நின்றிடவேண்டும்
ஒம் ஒம் ஒம் ஓம்.

மகா கவி பாரதியார்

2 comments:

Anonymous said...

பாரதி பாடல் மிகவும் அருமையாக உள்ளது. தட்டச்சு செய்து அனுப்பியமைக்கு நன்றி

Anonymous said...

பாரதி பாடல் மிகவும் அருமையாக உள்ளது. தட்டச்சு செய்து அனுப்பியமைக்கு நன்றி