Thursday, March 23, 2006

கிராமத்து கனவு

பனைகள் வரிசையாக நிற்கும்
பச்சைக்கு மேல்
பச்சை பச்சையாய் களிகள்
பறந்து திரியும்.
கூலி வேலை செய்யும் குமரிகள்
செல்வி, லட்சுமி, பூமணி
வயல் வரப்பில்
வரிசையாய் நடக்கும் பெண்கள்.

வெங்காயம் விலை பேச வரும் தரகர்கள்.
வெண்டைக்காய் முற்றல் என
முறையிடும் முதியவர்கள்.
பஸ்ஸில் வரும் போது.
இவர்களை நான் பார்ப்பேன்.

இப்பொழுது நான்
பஸ்ஸில் வருவதில்லை
எப்பொழுது வருவேனோ
எனக்கும் தெரியாது
இப்பொழுது இவர்கள்
எப்படி இருப்பார்கள்?
இவர்களுக்கு என்ன ஆகியிருக்கும்?

2 comments:

சிங். செயகுமார். said...

கறந்த பால் மடி புகுமோ
இறந்த காலம் சொல்லும் கதை
இன்னும் நிழலாய் நெஞ்சில்!



( நண்பரே"பச்சை பச்சையாய் கிளிகள் " என்று வருமென்று நினைக்கிறேன்)

தமிழ் குரு said...

இங்ஙனம் இறந்த காலம் சொல்லும் கதை இருந்தால் "பச்சை பச்சையாய் கிளிகள் " வந்துகொண்டே இருக்கும்