இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களின் பட்டியல்கள் இந்த இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, நண்பர்களே உங்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Click Here
http://amie.50webs.org/univlist
Tuesday, June 06, 2006
Monday, April 24, 2006
பாப்பாப் பாட்டு
ஓடி விளையாடு பாப்பா,- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா,- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்
கிரக்கப் படவேணும் பாப்பா.
பாலைப் பொழிந்துதரும், பாப்பா,- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி, பாப்பா.
வண்டி யிழுக்கும்நல்ல குதிரை,- நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,- -வை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வ நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உழிழ்ந்துவிடு பாப்பா.
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா,- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் -னியதடி பாப்பா,- நீ
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே,- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா,
செல்வம் நிறைந்தஹிந் துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
வடக்கில் -மயமலை பாப்பா - தெற்கில்
வாழுங் குமரி முனை பாப்பா,
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - -தன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - -தைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
சாதிகள் -ல்லையடி பாப்பா;- குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்;- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;- -துவாழும்
முறைமையடி பாப்பா.
-மகா கவி பாரதியார்
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா,- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்
கிரக்கப் படவேணும் பாப்பா.
பாலைப் பொழிந்துதரும், பாப்பா,- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி, பாப்பா.
வண்டி யிழுக்கும்நல்ல குதிரை,- நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,- -வை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வ நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உழிழ்ந்துவிடு பாப்பா.
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா,- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் -னியதடி பாப்பா,- நீ
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே,- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா,
செல்வம் நிறைந்தஹிந் துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
வடக்கில் -மயமலை பாப்பா - தெற்கில்
வாழுங் குமரி முனை பாப்பா,
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - -தன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - -தைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
சாதிகள் -ல்லையடி பாப்பா;- குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்;- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;- -துவாழும்
முறைமையடி பாப்பா.
-மகா கவி பாரதியார்
Monday, April 10, 2006
இதை விடச்சிறந்த கருத்தும் இல்லை
கங்கையை விட சிறந்த புண்ணிய தீர்த்தம் இல்லை;
தாயை விட மேன்மையான ஆசான் இல்லை;
வேதத்துக்கு ஒப்பான சாஸ்திரம் கிடையாது;
சாந்திக்குச் சமமான சுகம் வேது இல்லை;
சூரிய ஒளிக்கு ஈடான பிரகாசம் மற்றொன்து இல்லை; பொறுமையை விட வலியதான ஆயுதம் கிடையாது;
புகழை விடச் சிறந்த செல்வம் இல்லை;
கல்வி அறிவை விடப் பயன்மிக்க லாபம் வேறு இருக்க முடியாது.
--- வால்மீகி ராமாயணம்
தாயை விட மேன்மையான ஆசான் இல்லை;
வேதத்துக்கு ஒப்பான சாஸ்திரம் கிடையாது;
சாந்திக்குச் சமமான சுகம் வேது இல்லை;
சூரிய ஒளிக்கு ஈடான பிரகாசம் மற்றொன்து இல்லை; பொறுமையை விட வலியதான ஆயுதம் கிடையாது;
புகழை விடச் சிறந்த செல்வம் இல்லை;
கல்வி அறிவை விடப் பயன்மிக்க லாபம் வேறு இருக்க முடியாது.
--- வால்மீகி ராமாயணம்
Sunday, April 09, 2006
ஒட்டாதே
காதலியே
இனி அனுப்பும் கடிதங்களுக்கு
தபால் தலை
ஒட்டாதே
உன் இதயம் சுமந்து வரும்
கடிதங்களுக்கு
அவர்கள் ஓங்கிக் குத்துவதைத்
தாங்கமுடியவில்லை
(படித்தது)
இனி அனுப்பும் கடிதங்களுக்கு
தபால் தலை
ஒட்டாதே
உன் இதயம் சுமந்து வரும்
கடிதங்களுக்கு
அவர்கள் ஓங்கிக் குத்துவதைத்
தாங்கமுடியவில்லை
(படித்தது)
Friday, April 07, 2006
எனது பெயர்
உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான் உண்ர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறது என்று!!!
(படித்தது)
உச்சரிக்கும் வரை
நான் உண்ர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறது என்று!!!
(படித்தது)
Monday, March 27, 2006
நம்பிக்கை
நம்பிக்கை என்பது உனக்குள் இருக்கும் ஒரு புதையல், இதை நீ உணர்ந்தால் உலகத்தை வென்று விடலாம்
ராஜ குமார்
ராஜ குமார்
Thursday, March 23, 2006
இறந்த காலம் சொல்லும்
கறந்த பால் மடி புகுமோ
இறந்த காலம் சொல்லும்
கதை
இன்னும் நிழலாய் நெஞ்சில்!
சிங். செயகுமார்.
இறந்த காலம் சொல்லும்
கதை
இன்னும் நிழலாய் நெஞ்சில்!
சிங். செயகுமார்.
கிராமத்து கனவு
பனைகள் வரிசையாக நிற்கும்
பச்சைக்கு மேல்
பச்சை பச்சையாய் களிகள்
பறந்து திரியும்.
கூலி வேலை செய்யும் குமரிகள்
செல்வி, லட்சுமி, பூமணி
வயல் வரப்பில்
வரிசையாய் நடக்கும் பெண்கள்.
வெங்காயம் விலை பேச வரும் தரகர்கள்.
வெண்டைக்காய் முற்றல் என
முறையிடும் முதியவர்கள்.
பஸ்ஸில் வரும் போது.
இவர்களை நான் பார்ப்பேன்.
இப்பொழுது நான்
பஸ்ஸில் வருவதில்லை
எப்பொழுது வருவேனோ
எனக்கும் தெரியாது
இப்பொழுது இவர்கள்
எப்படி இருப்பார்கள்?
இவர்களுக்கு என்ன ஆகியிருக்கும்?
பச்சைக்கு மேல்
பச்சை பச்சையாய் களிகள்
பறந்து திரியும்.
கூலி வேலை செய்யும் குமரிகள்
செல்வி, லட்சுமி, பூமணி
வயல் வரப்பில்
வரிசையாய் நடக்கும் பெண்கள்.
வெங்காயம் விலை பேச வரும் தரகர்கள்.
வெண்டைக்காய் முற்றல் என
முறையிடும் முதியவர்கள்.
பஸ்ஸில் வரும் போது.
இவர்களை நான் பார்ப்பேன்.
இப்பொழுது நான்
பஸ்ஸில் வருவதில்லை
எப்பொழுது வருவேனோ
எனக்கும் தெரியாது
இப்பொழுது இவர்கள்
எப்படி இருப்பார்கள்?
இவர்களுக்கு என்ன ஆகியிருக்கும்?
Wednesday, March 22, 2006
Tuesday, March 21, 2006
செந்தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே - -ன்பத்தேன்
வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள் (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - யென
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந தமிழ்நாடூ - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தந் தவஞ்செய் குமரியெல்லை - வட
மாலவன் குன்றம் -வற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத் தின்மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யிடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் தார்தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம் - -ன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
மகா கவி பாரதியார்
வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள் (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போலிளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - யென
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந தமிழ்நாடூ - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தந் தவஞ்செய் குமரியெல்லை - வட
மாலவன் குன்றம் -வற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத் தின்மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யிடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் தார்தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம் - -ன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
மகா கவி பாரதியார்
சத்தியம் - சிந்தனை - தர்மம்
* சத்தியம் சொல்; தர்மம் செய். - ஹிந்து வேதம்
* சிந்தியாது படிப்பது ஜீரணியாது உண்பதை ஒக்கும் - பர்க்.
* நீ அறத்தைக் காக்கிறாய். அதனால் அறம் உன்னைக் காக்கும் - இராமன்.
* சிந்தியாது படிப்பது ஜீரணியாது உண்பதை ஒக்கும் - பர்க்.
* நீ அறத்தைக் காக்கிறாய். அதனால் அறம் உன்னைக் காக்கும் - இராமன்.
Monday, March 20, 2006
எனக்கு பிடித்த பாரதி பாடல் - வேண்டுவன
வேண்டுவன
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்கை
வசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திடவேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுறவேண்டும்
வானகமிங்கு தென்படவேண்டும்
உண்மை நின்றிடவேண்டும்
ஒம் ஒம் ஒம் ஓம்.
மகா கவி பாரதியார்
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்கை
வசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திடவேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுறவேண்டும்
வானகமிங்கு தென்படவேண்டும்
உண்மை நின்றிடவேண்டும்
ஒம் ஒம் ஒம் ஓம்.
மகா கவி பாரதியார்
Saturday, March 18, 2006
அச்சமில்லை
அச்சமில்லை
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
-ச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
துச்சமாக வெண்ணிநம்மைத் துறுசெய்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
-ச்சைகொண்ட பொருளெலாம் -ழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
-மகா கவி பாரதியார்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
-ச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
துச்சமாக வெண்ணிநம்மைத் துறுசெய்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
-ச்சைகொண்ட பொருளெலாம் -ழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
-மகா கவி பாரதியார்
Friday, March 17, 2006
கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)
தின்னப் பழங்கொண்டு தருவான்;- பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)
தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி யென்பான் - சற்று
மனமகிழு நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)
அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின்,"கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)
பின்னலைப் பின்னின் றிழுப்பான்;- தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)
புள்ளாங் குழல்கொண்டு வருவான்;- அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போல - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)
அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகி லும்பார்த்த துண்டோ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
விளையாட வாவென் றழைப்பான்;- வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
-ளையாரொ டாடிக் குதிப்பான்;- எம்மை
-டையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)
அம்மைக்கு நல்லவன், கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கு நல்லவன் போலே நடப்பான். (தீராத)
கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;- பொய்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசி - தெருவில்
அத்தனை பெண்களையு மாகா தடிப்பான். (தீராத)
-மகா கவி பாரதியார்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)
தின்னப் பழங்கொண்டு தருவான்;- பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)
தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி யென்பான் - சற்று
மனமகிழு நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)
அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின்,"கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)
பின்னலைப் பின்னின் றிழுப்பான்;- தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)
புள்ளாங் குழல்கொண்டு வருவான்;- அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போல - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)
அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகி லும்பார்த்த துண்டோ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
விளையாட வாவென் றழைப்பான்;- வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
-ளையாரொ டாடிக் குதிப்பான்;- எம்மை
-டையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)
அம்மைக்கு நல்லவன், கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கு நல்லவன் போலே நடப்பான். (தீராத)
கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;- பொய்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசி - தெருவில்
அத்தனை பெண்களையு மாகா தடிப்பான். (தீராத)
-மகா கவி பாரதியார்
மூளை
வயிற்றைப் போல் மூளையைக் கடவுள் படைக்காததுதான் வருந்தத் தக்கது. வயிறு காலியாயிருந்கால், அதற்குள் எதாவது போடாத வரைக்கும் அவனுக்கு நிம்மதியே இருப்பதில்லை. மூளை காலியாயிருந்தால், இந்த மாதிரி நிகழ்வதில்லையே!
- ஜோன் கிராஃபோர்டு
- ஜோன் கிராஃபோர்டு
மின்மினிப் புத்தி
மின்மினிப் பூச்சி உட்காரும்போது மின்னுவதில்லை. மனிதன் சோம்பேறி ஆகும்போது அவனது புத்தி என்ற தீபம் அணைகிறது.
-எஸ்.ஈ. ஸந்தன்.
-எஸ்.ஈ. ஸந்தன்.
இரக்கம்
தபால்காரனுக்கு கூட என் மீது
இரக்கம் இருக்கிறது
எவர் வீட்டு கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு த்ற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!!
(படித்தது)
இரக்கம் இருக்கிறது
எவர் வீட்டு கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு த்ற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுத தொடங்காமல்!!!
(படித்தது)
விடியல்
காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டுமல்ல
வாழ்விலும்
வசந்தம்
வரட்டும்
என்பதற்காக!!!
(படித்தது)
Thursday, March 16, 2006
பார்வை
இனியவளே இனி யாரையும்
நிமிர்ந்து பார்காதே!
உன் கண்களை பார்தே
என்னைக்கண்டு பிடித்து விடுவார்கள்.
(படித்தது)
நிமிர்ந்து பார்காதே!
உன் கண்களை பார்தே
என்னைக்கண்டு பிடித்து விடுவார்கள்.
(படித்தது)
சொர்க்கம்
சொர்க்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன்
அவள் தான்
சொர்க்கம்
என்பதை
அறிந்து
கொள்ளாமல்!!!
(படித்தது)
விலாசத்தை போய்
விசாரித்தேன்
அவள் தான்
சொர்க்கம்
என்பதை
அறிந்து
கொள்ளாமல்!!!
(படித்தது)
கடிதம்
எழுது எழுது...
எனக்கு ஒரு கடிதம் எழுது...
என்னை நேசிக்கிறாய் என்றல்ல...
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது
எழுது!!!
(படித்தது)
எனக்கு ஒரு கடிதம் எழுது...
என்னை நேசிக்கிறாய் என்றல்ல...
நீ வேறு எவரையும்
நேசிக்கவில்லை என்றாவது
எழுது!!!
(படித்தது)
Wednesday, March 15, 2006
கவிதை
எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத்தான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!
(படித்தது)
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத்தான் என்று...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகளல்ல
நான் தான் என்று!!!
(படித்தது)
(அ)நியாயம்
என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில் தண்டனை பெறுவது நானா?
(படித்தது)
என் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில் தண்டனை பெறுவது நானா?
(படித்தது)
Wednesday, February 08, 2006
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ரயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
-பாரதியார்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ரயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
-பாரதியார்
Subscribe to:
Posts (Atom)